15. மூர்த்தி நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 15
இறைவன்: சோமசுந்தரர்
இறைவி : மீனாட்சியம்மை
தலமரம் : தில்லை
தீர்த்தம் : சிவகங்கை
குலம் : அந்தணர்
அவதாரத் தலம் : மதுரை
முக்தி தலம் : மதுரை
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : ஆடி - கிருத்திகை
வரலாறு : மதுரை மாநகரில் அவதாரம் செய்தவர். ஆலவாய் பெருமானுக்குத் தினமும் சந்தனம் அரைத்துக் கொடுக்கும் திருப்பணியைச் செய்து வந்தார். அப்போது கருநாடக தேசத்து மன்னன் மதுரையை வென்று தான் சார்ந்திருந்த சமயமான சமணத்தைப் பரப்பும் நோக்கில் நாயனாருக்கு சந்தனக் கட்டைகள் கிடைக்கவிடாமல் செய்தான். வருந்திய நாயனார் சந்தனம் அரைக்கும் கல்லில் தம் முழங்கையையே தேய்த்து தம் திருப்பணியைத் தொடர்ந்தார். அதனைக் கண்ட இறைவர் அவருக்குக் காட்சி கொடுத்து உனக்குத் துன்பம் கொடுத்தவன் இறப்பான். நீ இந்த நாட்டிற்கு மன்னனாக இருந்து சைவ சமயத்தை வளர்ப்பாயாக என்று கூறியருளினார். அவ்வண்ணமே அரசனும் மாள பட்டத்து யானை மூர்த்தியாரின் கழுத்தில் மாலையிட்டு அரசனாகத் தேர்வு செய்து தன் முடி மீது வைத்துக்கொண்டது. திருநீறு உருத்திராக்கம் அணிந்து நாட்டை ஆண்டு இறுதியில் இறைவன் திருவடியை அடைந்தார்.
முகவரி : அருள்மிகு. மீனாட்சியம்மை திருக்கோயில், மதுரை – 625001 மதுரை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : தொலைபேசி : 0452-2344360
திரு. ச.செந்தில் ஆறுமுகம்-அலைபேசி : 9789689498

இருப்பிட வரைபடம்


நட்டம் புரிவார் அணி நற்றிரு மெய்ப் பூச்சு இன்று 
முட்டும் பரிசு ஆயினும் தேய்க்கும் கைமுட்டாது என்று 
வட்டம் திகழ் பாறையின் வைத்து முழங்கை தேய்த்தார் 
கட்டும் புறந்தோல் நரம்பு என்பு கரைந்து தேய

- பெ.பு. 992
பாடல் கேளுங்கள்
 நட்டம் புரிவார்


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க